ஈழம்

ஈழம்

வியாழன், 5 நவம்பர், 2015

இந்தியபடையினருடனான விடுதலைப்புலிகளின் கடைசி சந்திப்பு.

"இந்திய இராணுவத்துடன் மோதுவதற்கு முடிவுவெடுத்த வேளையில் வெற்றி-தோல்வி என்ற பிரச்சினை பற்றி நான் அலட்டிக்கொள்ளவில்லை. இந்த யுத்தத்தை எதிர்கொள்ளும் உறுதியும்-துணிவும் எம்மிடம் உண்டா என்பது பற்றியே சிந்தித்தேன. தோல்வி ஏற்படலாம் என்ற அச்சத்தில் ஒரு மக்கள் இனம் தனது இலட்சியத்தையும் உரிமைகளையும் விட்டுக்கொடுப்பதில்லை." -தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்


"பிரபாகரனின் உறுதிப்பாட்டைப் புரிந்து கொள்ள இந்திய அதிகாரிகள் தவறிவிட்டனர்! என இந்திய இராணுவப் புலனாய்வுத் துறையின் முன்னாள் அதிகாரியான கேணல் ஹரிகரன் தெரிவித்த கருத்தினை மீட்டு பார்ப்பது எங்கள் தேசிய தலைவரின் இந்தியா குறித்த பார்வையை புரிந்து கொள்ள வாய்ப்பாக இருக்கும். 

தமிழீழத்தை உருவாக்குவதற்கான போராட்டத்துக்குத் தலைமை தாங்கும் பிரபாகரனின் உறுதிப்பாட்டைப் புரிந்து கொள்ள இந்திய அரசு, புலனாய்வு அமைப்புகள், இராணுவம் என்று எல்லோருமே தவறிவிட்டனர் இவ்வாறு தெரிவித்துள்ளார் இந்திய இராணுவப் புலனாய்வுத் துறையின் முன்னாள் அதிகாரியான கேணல் ஹரிகரன். இந்தியாவின் முன்னாள் மத்திய அமைச்சர் நட்வர்சிங் எழுதியுள்ள நூலில், இந்தியப் படைகளை இலங்கைக்கு அனுப்புவதற்கு முன்னர், அமைச்சரவையின் அனுமதியைப் பெறவில்லை என்று கூறப்பட்டுள்ளது. அதுகுறித்துக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, "ராஜீவ்காந்தி திடீர் முடிவுகளையே எடுத்தார். அவருக்கு கொள்கை வகுப்பாளர்களின் கருத்துக்களைச் செவிமடுக்க நேரம் இருக்கவில்லை.

இலங்கை இந்திய உடன்பாட்டில் கையயழுத்திடப்பட்ட மறுநாள், அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்ட போது ராஜீவ்காந்தி கடற்படைச் சிப்பாய் ஒருவரால் தாக்கப்பட்டார். அப்போது, ஜெனரல் சுந்தர்ஜியின் கருத்தை ராஜீவ் கேட்டார். இராணுவத் தளபதியாக இருந்த அவர், விடுதலைப் புலிகளை 72 மணிநேரத்தில் தோற்கடித்து விட முடியும் என்று கூறினார்.

இலங்கையின் கள நிலவரங்கள் குறித்து ஜெனரல் சுந்தர்ஜிக்கு எந்த யதார்த்தமும் தெரியாது. அதனால்தான் இலங்கையில் இருந்து 19 மாதங்களின் பின்னர், இந்திய அமைதிப் படைஅவமானத்துடன் திரும்பியது. ஆனால், வடக்கில் இந்திய அமைதிப்படை நிலை கொண்டிருந்தமை, தனது இராணுவத்தை திசை திருப்புவதற்கும், நாட்டின் பிறபகுதிகளில் கிளர்ச்சிகளை அடக்குவதற்கும் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனவுக்கு உதவியது. தெரிவுகள் இல்லாத இலங்கை குறிப்பாக, யாழ்ப்பாணத்தில் 1987 ஆம் ஆண்டு ஜூனில், ஒப்பரேசன் பூமாலை நடவடிக்கை மூலம், இந்தியா உணவுப் பொதிகளை வீசிய பின்னர்,

எந்த வெளிநாட்டு உதவிகளும் வராத நிலையில், உடன்பாட்டில், கையயழுத்திடுமாறு ஜே.ஆரின் கையை இந்தியா முறுக்கியபோது, அவருக்கு சிறியளவு தெரிவுகளே இருந்தன. இந்தியாவின் கவலைகளை இலங்கை புறக்கணித்தால், இந்தியா படைபலத்தைப் பயன்படுத்த தயங்காது என்பதை இது வெளிப்படுத்தியது. இந்த நடவடிக்கை, இலங்கையில் தமிழர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில், பங்களாதேஷ் பாணியில், இந்தியா சுதந்திர தமிழீழத்தை ஏற்படுத்தி விடுமோ என்ற அச்சத்தையும் மூட்டியது.

ஆனால் உடன்பாடு ஒன்றுபட்ட இலங்கைக்கு இந்தியாவின் ஆதரவை உறுதிப்படுத்தியதுடன், சுதந்திர தமிழீழத்துக்கான போரையும் தணித்தது. அடிபணிய மறுத்த பிரபாகரன் இறுதியில், ஜே.ஆர்.ஜெயவர்த்தன, விடுதலைப் புலிகளுடன் இந்தியாவைப் போரிட வைத்தார். இந்தியாவில் இருந்து, திரும்பியதும், இந்தியாவின் வரிசையில் உள்ள கால் விரலாக இருக்கமாட்டேன் என்று விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் சுதுமலையில் நிகழ்த்திய உரையை இந்திய அரசு கவனமான எடுத்துக் கொண்டிருக்க வேண்டும்.

புலிகள் தமது ஆயுதங்களை பெயரளவுக்கே ஒப்படைத்தனர். பயன்படுத்த முடியாத, பயனற்ற ஆயுதங்களே ஒப்படைக்கப்பட்டன. இந்திய அரசும், புலனாய்வு அமைப்புகள், இராணுவம் என்று எல்லோருமே, தமிழீழத்தை உருவாக்குவதற்கான போராட்டத்துக்குத் தலைமை தாங்கும் பிரபாகரனின் உறுதிப்பாட்டைப் புரிந்து கொள்ளத் தவறி விட்டனர் என்று தெரிவித்துள்ளார். கேணல் ஹரிகரன் 1987 ஆம் ஆண்டு தொடக்கம், 1990 ஆம் ஆண்டு வரை இந்திய இராணுவப் புலனாய்வு அதிகாரியாகப் பணியாற்றியிருந்தார்.

ஆம்! எங்கள் தேசியத் தலைவர் பேசாமல் பேச வைக்கும் தமிழர் தலைவர். இன்று மட்டுமல்ல எத்தனை யுகம் கடந்தாலும் தமிழனாக பிறக்கும் ஒவ்வொருவருக்குள்ளும் வீரம் பிறக்கும் எங்கள் தலைவர் வீரம் படிக்கையில்.





















எதிரிக்கும் இவர் நேர்மை பிடிக்கும். உலக இராணுவமே இவர் பெருமை படிக்கும்!



பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

இத்தளத்தின் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற தங்கள் மின்னஞ்சல் முகவரி கீழே பதிவு செய்யவும்

Image Hosted by ImageShack.us